மத்திய சாகித்ய அகாதமியும் ஒரிசா சாகித்ய அகாதமியும் இணைந்து 1998ம் ஆண்டு புவனேஷ்வரில் அகில இந்திய கவிஞர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. மூன்று நாள் நிகழ்ச்சி. தமிழிலிருந்து ரவி சுப்ரமணியன், சிபிச்செல்வன் ஆகியோருடன் நானும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் வாசிக்கவென நான்கு கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டு செல்லவேண்டியிருந்தது. என் வேண்டுகோளுக்கு இணங்கி திரு.ஆர்.சிவகுமார், திரு.பி.ராஜா ஆகிய இருவரும் தலா இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்து உதவினர்.
அப்போது ஈரோட்டிலிருந்த நான் அங்கிருந்து சென்னை சென்று ரவியுடன் சேர்ந்து கோரமண்டல் விரைவு ரயிலில் புவனேஷ்வர் சென்று சேர்ந்தேன். சிபி முன்பே புறப்பட்டுச் சென்றிருந்தார். நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பே சென்றிருந்ததால் கொனார்க், பூரி, புவனேஷ்வரில் சில கோயில்களை ஆகியவற்றை காணும் வாய்ப்பு கிடைத்தது.
சவுக்குத் தோப்புகளுக்கிடையே மணல் மேட்டில் அமைந்திருந்த கொனார்க் சூரியன் கோயிலில் சில மணிநேரங்களை செலவழித்த பிறகு பூரியின் அழகிய கடற்கரையில் உலவிவிட்டு ஜெகநாதர் கோயிலையும் தரிசித்தோம்.
மறுநாள் காலையில் நிகழ்ச்சி நடக்கவிருந்த சிலிகா ஏரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
பிரமாண்டமான சிலிகா ஏரிக் கரையில் அமைந்திருந்த ஒரு ரிசார்டில் விழா நடந்தது.
இரண்டாம் நாள் மாலையில் அழகிய படகொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதை வாசிப்பு நிகழ்வில் எனது இந்த நான்கு கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கவிதைகளை வாசித்து முடித்தபோது சம்பிரதாயமாய் அனைவரும் கைதட்டினார்கள். யாருக்கும் காதில் விழுந்ததா, புரிந்ததா என்று அப்போது தெரியவில்லை.
மறுநாள் காலையில் விடுதி அறைக்கு வெளியே அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, வங்கக் கவிஞர் புன்னகைத்தபடியே வந்தார். தாடிவைத்த இளைஞர். என்னிடம் நெருங்கி கைகுலுக்கியபடி சொன்னார் “உங்களது கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன. இங்கு வாசிக்கப்பட்ட கவிதைகளிலேயே சிறந்த கவிதைகள்.” சிறிது நேரம் தமிழ்க் கவிதைகள் குறித்தும் அங்கிருந்த மற்ற கவிஞர்களைக் குறித்தும் ஆங்கிலத்தில் உரையாடினோம்.
இப்போது இதை எழுதும்போது அந்தக் கவிஞரின் பெயரை என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. குறிப்புகளைத் தேடி எடுத்து பின்னர் தந்துவிடுகிறேன்.
அந்த விழாவின்போது இந்திய அளவில் முக்கியமான கவிஞரான ரமாகாந்த் ரத் அவர்களை சந்தித்து உரையாடியது முக்கியமான நிகழ்வு.
இக் கவிதைகளை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துத் தந்த திரு.ஆர்.சிவகுமார், திரு.பி.ராஜா இருவருக்கும் நன்றிகள்.
0
Four
Poems
1
The
Picture that cannot be
I m not going to draw your picture
I know it is impossible
to enclose your personality on a canvas
that is nailed to a square frame.
My ductile brush cannot manage your stateliness
in the timeless space.
No glowing colour in my palette is suited for it.
What could I draw with
your portrait that is inaccessible to lines?
I have no answer to your smiley
that percolates on the shadow-plate air.
Besides, I have a fear.
My strokes have no strength
to carry the flame of your eye.
Above all
as I have no skill to express your ecstatic
silence
Without discordance
I m not going to draw your picture.
With fascinating colours
on the curtain on boundless time
You ll draw your picture yourself
One day.
That day
I ll discard my brush
satisified
That I ve drawn my life’s exceptional picture.
(Translated
by Mr.R.Sivakumar)
2
A
Handshake at last
With a gun aiming at my temple
You are there. Face to face
filled with arrogance born of victory.
I, the defeated, am with a drooping head
My hands are tied behind
The knot of the nylone rope
feeds on the flesh of my wrist.
Smoky region pervaded by the explosive fume
A pile of bullet-pierced bodies
the undentified, blasted and rent,
are not yet decayed.
The rage of war lately silenced
by the screech of eagles.
Many co-captures are shot dead
Their hot blood burns me
in spite of my thick boots.
See – you have a chance.
Check the power of your gun
to blow out my brain.
A sure death is painless.
My death is my message.
Yet, my friend!
Untie my hands…
Let me shake your hands
Once, at last.
(Translated
by Mr.R.Sivakumar)
3
To the dancing daughter…
In the casuarinas grove
behind my easy chair
lurks still the yogic dusk.
Your letter brings back to my memory
your face after a long lapse of time
my heart jumps for joy
I am feasting my eyes
on the dance you danced
in the music square
under the full moon sky.
Were you aware of the kiss
I planted on your bloodshot feet
when you were dead tired on that night?
Your feet that learnt the art
on my chest with
the tune of your anklet bells,
now dance in the Hall of fame.
O my perfection! I can resist no more/
Before my hands go numb
let me throw open my heart.
Renovate my sand-castles
wrecked by turbulent waves.
String my wind-blown dreams
and deck your dark tresses with it.
Complete my unfinished lyrics
with your diction.
Fasten my anklet bells
that have not tinkled for a long time.
Dance the, the dance.
Begin to dance the dance
Left incomplete by my spent foot.
0
(Translated
by Mr.P.Raja)
4
Endless Journey
Cankerous worms feast upon
The blood cells.
I stand on the pinnacle
With my hand outstretched.
Your sweetest song
Unable to reach my ears
Continue to fall somewhere.
Your melodious tunes dash against
Unblunt rocks only to break into
Smithereens.
Your feathery voice
Floats dancing in the air
Escaping my fingers.
Shivering legs speed up their tempo.
The pinnacle loosens
Its final hold.
I squeal in silence
For fear that my death throes
Would mutilate your melodious tunes.
Ah! I am falling now.
The lovely traps of death
Are closing in on me.
And death creaves
To hug me in a frenzy.
I will vanquish
The ascending scale of your voice.
My palms still remain unclosed.
I will pluck
From any of the trees
Your musical note
That has bloomed there
And hold it
tight
Forever.
(Translated
by Mr.P.Raja)
No comments:
Post a Comment