Saturday, 9 December 2017

மஞ்சள் சரக்கொன்றை

மஞ்சள் சரக்கொன்றை அல்லது சித்திரைப் பூக்கள்



சித்திரைப் பூக்கள் என்றும் சொல்கிறார்கள்.
மஞ்சள் சரக்கொன்றை என்றே எனக்கு அறிமுகம்.
ஒத்தைக்கால் மண்டபத்தை அடுத்து
மேற்குப் பார்த்த அந்த வீட்டின் முகப்பில்
பங்குனி மாதப் பொழுதொன்றில் அதைப் பார்த்தேன்.
மஞ்சள் சிறு துளிகள் சரம் சரமாய் தொங்கியிருக்க
காலையின் சுடுவெயிலில் அது மனோகரமாய் நின்றது.
ஒவ்வொரு துளியும் இலையா? மலரா?
சரக்கொன்றை மரத்துக்கு இலைகளே இல்லையா?
அல்லது இலைகள்தான் இப்படி பழுத்து மஞ்சளாகி மணக்கிறதா?
பங்குனியும் கடந்து சித்திரையிலும் சிலிர்த்து மினுத்து
வைகாசி அடைமழை பிடிக்கும் பருவத்தில்
அந்த மரம் காணாமல் போகத் தொடங்குகிறது.
இப்போது அது சரக்கொன்றை என்றில்லாது
எல்லா மரங்களையும்போல
இலை தழைத்து நிற்கிறது.
மஞ்சளின் அடையாளம் துளியும் இல்லை.
சித்திரைப் பூக்கள் கொண்ட அந்த மரம் இனி
சரக்கொன்றை மரமென நான் அறிய
இனியொரு வேனிற்காலம் வரைக் காத்திருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

ஆங்கில மொழியாக்கத்தில் என் கதைகள்

  சிலர் தங்களது வேலைகளை மட்டும் கவனமாகவும் சிரத்தையாகவும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். அங்கீகாரம், பரிசு, விருது ஆகியவற்றைப் பற்றி ப...