Thursday 11 June 2020

மனைமாட்சி - பாதசாரி

எம்.கோபாலகிருஷ்ணனின் ' மனைமாட்சி ' நாவலை படித்து முடித்தேன். ஆண்- பெண் திருமண உறவுகளின் பின்னணியில்,பெண் கதாபாத்திரங்களின் குணவார்ப்புகள் அதிநுட்பமும் ஆழமுமாக , திகைப்பூட்டும் நிறபேதங்களோடு படைக்கப்பட்டுள்ளன.மனதின் பேயாட்டத்தில் வெகுளியாகச் சுலபத்தில் சிக்கிக் கொண்டு ஆடும் பெண்.தானும் ஆடி கொண்டவனையும் ஆட்டுவிக்கிறாள்.ஆண் கதாபாத்திரங்கள் பலரும் சுதாரித்து பொறுமை காக்கிறார்கள்.இன்றைய இளைஞர் உலகம் , திருமண உறவுச் சிக்கல்களை அதிர்ச்சி செண்டிமெண்ட் எதுவுமின்றிப் பார்த்து வெட்டெனக் கடந்து விடுகிறது.பெண்ணின் மறுபக்கக் கருணையும் ஆண் கதாபாத்திரத்தால் புரிந்து கொள்ளப்படுகிறது.எல்லாவற்றுக்கும் மேலாக நாவலில் முக்கிய பெண் கதாபாத்திரம்:
நதி . ' நீராலான 'இந்த முக்கியமான நாவலில் படைப்பாளியின் இந்தக் கூர்மையான சுடரும் கவித்துவ வரிகளே புதினம் காட்டும் எல்லாவற்றையும் புரிய வைக்கும் : "ஒளியும் இருளும் வேறல்ல.இருள் ஒளியின் மறுபக்கம்.இருளே ஒளியைக் காட்டுகிறது.இருளே ஒளியை மறைக்கிறது.ஒளி இருளை விழுங்கிச் செறிக்கிறது."

பாதசாரி 03 ஆகஸ்ட் 2018

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...